25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட டிங்கில் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளிக்கு உதவி கரம் நீட்டுங்கள்!

🔥 Views : 8
👁 Reading Now : 35

சிலாங்கூர் மாநிலத்தில் மிக மோசமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் டிங்கில் வட்டாரமும் அடங்கும். குறிப்பாக டிங்கில் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி வெள்ளத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த பள்ளியில் முதல் மாடி வரை வெள்ளம் ஏறியதால் பாலர் பள்ளி வகுப்பறை உட்பட புத்தகக் கிடங்கு முற்றாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சேரும் சகதியுமாக காட்சி அளித்த டிங்கில் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி நேற்று சுத்தம் செய்யப்பட்ட வேலையில் சேதமுற்ற தளவாடங்களுக்கு பதிலாக புதிய பொருட்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லுள்ளம் கொண்ட பொதுமக்கள் மற்றும் தொண்டூழிய இயக்கங்கள் பேருதவி புரிந்து தளவாடங்களை வாங்கி தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வரும் ஜனவரி 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் பயில்வதற்கு புத்தகங்களும் தேவைபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவிகள் செய்ய விரும்பும் பொதுமக்கள் 019-6634708 என்ற எண்ணில் கருணா என்பவரை நேரிடையாக அழைக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles