
நாட்டில் நேற்று வரை 53 லட்சத்து 89 ஆயிரத்து 370 பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். நேற்று மட்டும் 23,698 பேருக்கு இந்த மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தவிர நாட்டில் நேற்று வரை 2 கோடியே 28 லட்சத்து 35 ஆயிரத்து 291 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும் 2 கோடியே 31 லட்சத்து 34 ஆயிரத்து 791 பேருக்கு குறைந்த பட்சம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 45 ஆயிரத்து 182 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்
