28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மறுசுழற்சி கடைகளில் வேலை செய்ய 15,000 அந்நிய தொழிலாளர்கள் தேவை டத்தோஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்

🔥 Views : 5
👁 Reading Now : 60

நாட்டில் மலேசிய உலோகப் பொருள் மறுசுழற்சி கடைகளில் வேலை செய்ய 15 ஆயிரம் அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுவதாக மிம்தா எனப்படும் மலேசியா உலோகப் பொருள் மறுசுழற்சி சங்கத்தின் தலைவர் அதன் தலைவர் டத்தோஶ்ரீ பி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். அந்நிய தொழிலாளர்கள் இல்லாமல் உலோகப் பொருள் மறுசுழற்சி கடைக்காரர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. எங்களின் நிலைமையை அரசாங்கத்திடம் பல முறை தெரிவித்து விட்டோம். மிக விரைவில் மனிதவள அமைச்சு, உள்துறை அமைச்சு உட்பட பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப்பிற்கும் சங்கத்தின் சார்பில் மகஜர் ஒன்றை வழங்கவிருக்கிறோம். அதில், எங்களின் பிரச்சினைகளை முழுமையாக தெரிவித்துள்ளோம். எனவே, அரசாங்கத்திடமிருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்ப்பதாக சங்கத்தின் 23ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பேசிய டத்தோஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles