26.9 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

ஐந்து லோரிகள் மூலம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட காராக் மக்களுக்கு மலேசியத் தமிழர் குரல் உதவிக்கரம்

🔥 Views : 6
👁 Reading Now : 62

வெள்ளத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகாங் காராக் வட்டார மக்களுக்கு மலேசியத் தமிழர் குரல் நேற்று ஐந்து லோரிகள் மூலம் கொண்டு வந்த பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டியது. மலேசியத் தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் தலைமையில் மலாக்கா, சிலாங்கூர், பகாங் மற்றும் பினாங்கு மாநில தமிழர் குரல் பொறுப்பாளர்கள் ஐந்து லோரிகள் மூலம் தேவையான பொருட்களை கொண்டு வந்தனர். சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் உதவியோடு தாமான் காராக், தாமான் மக்மோர் உட்பட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதாக டேவிட் மார்ஷல் தெரிவித்தார். இன்னமும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியத் தமிழர் குரல் சார்பில் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles