28 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மர ஆலை நிறுவனங்கள் மிகப்பெரிய தொகையை வழங்க வேண்டும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்து

🔥 Views : 3
👁 Reading Now : 57

நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்திற்கு காரணமான மரம் வெட்டும் நிறுவனங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரிய தொகையை செய்ய வேண்டும் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். பேரழிவால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில், மரம் வெட்டும் நடவடிக்கைகள் வெள்ளப் பிரச்சினையை அதிகப்படுத்தியதைக் காட்டும் ஆதாரங்கள் இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். புகைப்படங்களைப் பார்த்தால், அதிகப்படியான மரம் வெட்டுதல் வெள்ளம் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான அறிகுறிகளைக் காணலாம். எனவே, மாநில அரசாங்கத்தைத் தவிர, அதிக லாபம் ஈட்டிய மர நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும். ஏனெனில் அவர்களும் பொறுப்பு இருக்கிறது என்று பஹாங் பெந்தோங் கெத்தாரியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி பின்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles