31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

தனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கி வெள்ள நிவாரண நிதியை தொடங்கினார் மாண்புமிகு பிரபாகரன்

🔥 Views : 6
👁 Reading Now : 41

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் வி பிரபாகரன் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கி வெள்ள நிவாரண நிதியை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் எனினும் துயரத்தில் இருந்து மீளவில்லை. அனைத்துப் பொருட்களையும் இழந்து பரிதவிக்கும் இவர்களுக்கு உதவும் வகையில் வெள்ள நிவாரண நிதியை தொடங்கி இருப்பதாக அவர் சொன்னார். இந்த வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறேன். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தளவாடப் பொருட்கள் உட்பட துணிகளை வாங்கி கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் நல்லுள்ளம் படைத்த பொதுமக்கள் Bank Mualamat 1406 0004649 715 என்ற வங்கிக் கணக்கில் நிதியை சேர்க்கலாம். இதனிடையே வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கி இருக்கும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் வி. பிரபாகரனை பொதுமக்கள் மெதுவாக பாராட்டியுள்ளனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles