31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதன்கிழமை முதல் ஆயிரம் வெள்ளி வழங்கப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

🔥 Views : 5
👁 Reading Now : 29

சிலாங்கூர் மாநிலத்தில் மிகவும் மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்க 1,000 வெள்ளி உதவித்தொகை நாளை புதன்கிழமை முதல் கட்டங் கட்டமாக வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். பொது மற்றும் தனியார் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கிருந்தவர்கள், இடம் பெயராதவர்கள் அல்லது துயர் துடைப்பு மையங்கள் தவிர்த்து இதர இடங்களில் தங்கியிருந்தவர்கள் ஆகிய மூன்று பிரிவினர் இந்த உதவித் தொகையைப் பெற தகுதி உள்ளவர்கள் என்று அவர் சொன்னார் . வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு எழுச்சிமிகு சிலாங்கூர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஆயிரம் வெள்ளியும் வழங்க சிலாங்கூர் மாநில அரசு முன் வந்திருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles