31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

கழிவுப் பொருளை நிர்வகிக்கத் தவறிய இரண்டு தொழிற்சாலைகள்: -வெ.16,000 தண்டம்

🔥 Views : 7
👁 Reading Now : 70

பெட்டாலிங் ஜெயா மற்றும் சிப்பாங்கில் உள்ள இரண்டு தொழிற்சாலைகள் கழிவுப் பொருட்களை முறையாக நிருவகிக்கத் தவறியதற்காக சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை-JAS மூலம் வெ.16,000 தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கோம்பாக், பெட்டாலிங் ஜெயா, ஜோஹன் செத்தியா மற்றும் சிப்பாங் வட்டார தொழில்துறைப் பகுதிகளின் சுற்றுச் சூழல் தொடர்பில் பெறப்பட்ட புகார்களை அமலாக்க அதிகாரிகள் விசாரணை செய்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக JAS தெரிவித்துள்ளது. தண்டம் விதிக்கப்பட்ட இரு நிறுவனங்களில் ஒன்று, அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகும். மற்றொன்று, சிப்பாங்கில் செயல்படும் தொழிற்சாலையாகும் என்று மாநில சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles