25.1 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

உக்ரேனை வசப்படுத்தியுள்ள ரஷ்யத் துருப்பினர் அமைதிகாப்புப் படையாம்: புடினின் கருத்துக்கு ஐநா மன்றம் அடியோடு மறுப்பு

🔥 Views : 20
👁 Reading Now : 30

உக்ரேன்மீது படையெடுக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே வான்-கடல்-தரை மார்க்கமாக முப்படைகளை ஏவியுள்ள ரஷ்யா, ஒரே நாளில் உக்ரேன் மக்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆக்கி உள்ளது.

உக்ரேன் ஒரு பன்னாட்டு கல்வி மையமாக தன்னை வடிவமைத்துக் கொண்ட நிலையில் மலேசியா உட்பட உலகின் பல நாடுகளையும் சேர்ந்த ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் தற்பொழுது பதுங்குகுழிகளையும் சுரங்க இரயில் பாதைகளையும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

உக்ரேனிய மக்கள் பேரளவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை தஞ்சம் நாடுவதால், உலக அளவில் பெரும் மனித அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஒட்டுமொத்த காரணமான விளாடிமிர் புடினின் ஆக்கிரமிப்பு அரசியல் போக்கு உலகின் சீற்றத்துக்கு ஆளாகி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles