25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பள்ளித் தவணை தொடங்குவதால்
500 மாணவர்களுக்கு இலவச முடிதிருத்தம்

🔥 Views : 8
👁 Reading Now : 40

பள்ளித் தவணை அடுத்த வாரம் தொடங்குவதையொட்டி செந்தோசா சட்டமன்ற தொகுதியில் 500 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தும் திட்டத்தை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தொடக்கி வைத்துள்ளார்.

இதன் முதல் கட்டத்தை நேற்று தொடக்கிவைத்தபோது, “குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளந்து” என்று அவர் தெரிவித்தார்.

பிள்ளைகளை பள்ளித் தவணைக்கு தயார்ப்படுத்தும் பெற்றோரின் முயற்சிக்கு இது ஓர் அணுகூலமாக இருப்பதுடன் பெற்றோரின் சுமையை ஓரளவு குறைக்கும். அத்துடன், முடிதிருத்தும் நிலைய உரிமையாளர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் இது உதவியாக இருக்கும் என்று குணராஜ் மேலும் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles