25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

புரிந்துணர்வு ஒப்பந்தம்:
பிரதமரின் வாக்குறுதிக்கு மதிப்பில்லை

🔥 Views : 7
👁 Reading Now : 30

நம்பிக்கைக் கூட்டணிக்கும் பிரதமருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2022-இல் கூடும் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரில் – மார்ச் மாதத்தில் கட்சி தாவும் தடைச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரும் அரசாங்கமும் உறுதியளித்த ஒப்பந்தமே மீறப்படுமானால், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதில் பொருள் இல்லை என்று ஜசெக புதிய தலைவர் லிம் குவான் எங் வெடித்துள்ளார்.

இதன் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜசெக பொதுப் பேரவையின்போது கருத்து தெரிவித்திருந்த லிம் குவானுக்கு பதில் தெரிவித்த தகவல் பல்லூடக அமைச்சர் அனுவார் மூசா,

“மக்களை குழப்பும் வகையில் எந்த அரசியல் கட்சியும் அச்சுறுத்தலை மேற்கொண்டால், அதற்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது” என்று குறிப்பிட்டிருந்த நிலையில், லிம் குவான் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles