
பெர்சத்து கட்சித் தலைவர் டான்ஸ்ரீ Muhyiddin Yassin-ஐ சந்தித்ததாகவும் ஆனால் அவர் மீண்டும் பிரதமராகுவதற்கு ஆதரவு தெரிவிப்பது மற்றும் அவருடன் ஒத்துழைப்பது குறித்து எதுவும் விவாதிக்கவிலையென எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
வழக்கமான ஒரு சந்திப்பாக மட்டுமே அது அமைந்தது; அதோடு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் டாக்டர் மகாதீருடன் ஒத்துழைக்குமா என்று வினவப்பட்டபோது அது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றும் அன்வார் மறுமொழி தெரிவித்தார்.
