28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

12 சட்டவிரோத குடியேறிகளுடன்
சாலை தடுப்பில் தப்பியோடிய வாகன ஓட்டுனர் கைது

🔥 Views : 8
👁 Reading Now : 30

மியன்மார் நாட்டைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிக்கொண்டு போலீஸ் தடுப்பு சோதனையில் நிற்காமல் தப்பிச் சென்ற MPV வாகனத்தின் டயர்களை சுட்ட பின்னர் அதன் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

கிழக்குக்கரை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைததலத்தில் பகிரப்பட்டது. 33 வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற MPV வாகனத்தின் டயர்களில் 5 முறை சுட்டதாக பகாங் போலீஸ் தலைவர் டத்தோ Ramli Mohammed Yoosuf தெரிவித்தார்.

கிளந்தானிலிருந்து பெட்டாலிங் ஜெயாவுக்கு சென்றுகொண்டிருந்த அந்த வாகனத்தின் ஓட்டுனருடன் அவரது உறவினர் என நம்பப்படும் 17 வயதுடைய இளைஞர் மற்றும் 12 சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles