28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சிலாங்கூரில் ஹராப்பானின் வெற்றிப் பாரம்பரியம்: கெஅடிலான் தொடர்ந்து பாதுகாக்கும்

🔥 Views : 6
👁 Reading Now : 28

கடந்த 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பக்கத்தான் ராயாட் (ஹராப்பான்) கூட்டணி பெற்ற வெற்றியின் பாரம்பரியத்தை தொடர்ந்து தற்காக்க கெஅடிலான் கட்சி தயாராக உள்ளது.

இதுநாள் வரை அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மேலும் தொடர்ந்து அமல்படுத்துவதற்கு வெற்றி நமக்கு மிக முக்கியம் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்வாண்டில் அனைத்து தொகுதி நிர்வாக குழுக்களும் கலைக்கப்படுவதற்கு முன்னர் மாநில தலைவர் மன்றத்தில் பேசிய அவர், 15வது பொதுத் தேர்தல் நமக்கு மிகப் பெரிய கடமை காத்திருக்கிறது என்றார்.

சிலாங்கூரை மேம்பாடடைந்த மாநிலமாக உருவாக்க நாம் பாடுபட வேண்டும்; கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதா என்பது குறித்து தாம் கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமிருடின் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles