33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சுக்மா போட்டி 2022: 800 சிலாங்கூர் விளையாட்டாளர்கள் 31 விளையாட்டுகளில் பங்கேற்பர்

🔥 Views : 7
👁 Reading Now : 70

கோலாலம்பூரில் வரும் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான மலேசிய விளையாட்டுப் போட்டி-சுக்மாபில் சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்து 800 விளையாட்டாளர்கள் 31 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.

எனினும், சுக்மா நுட்பக் குழுவின் ஆய்வுக்குப் பின்னரே விளையாட்டாளர்களின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம்- எம்.எஸ்.எம். நிர்வாகத் தலைவர் முகமது நிஸாம் மர்ஜூக்கி கூறினார்.

இதன் தொடர்பான முடிவை சுக்மா நுட்பக் குழு நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் வெளியிடும் என்றும் தற்போது அனைத்து விளையாட்டாளர்களும் தராவே தொழுகைக்குப் பின்னரும் வார இறுதி நாட்களிலும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles