33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க
சிலாங்கூர் மாநில அரசு 1.5 கோடி வெள்ளி ஒதுக்கீடு

🔥 Views : 4
👁 Reading Now : 62

சிலாங்கூர் மாநில அரசு, நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்காக வெ.1.5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களில் குறிப்பாக செலாயாங் நகராண்மைக் கழகத்திற்குட்பட்ட பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பாறைப் பகுதிகளில் நிலத்தை வலுப்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த சீரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே சமயம், அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாய், இந்தான் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேலும் 16 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்ய மாநில அரசு இணக்கம் தெரிவித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles