33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

வெ.2.23 மில்லியன் நட்டஈடு கேட்டு
முன்னாள் அட்டர்னி ஜெனரல் வழக்கு

🔥 Views : 6
👁 Reading Now : 34

2018-இல் 2-ஆவது முறையாக பிகேஆர் கட்சி ஆதரவுடன் பிரதமர் ஆன துன் மகாதீர், அப்போது தேசிய சட்டத்துறை தலைவராக இருந்த டான்ஸ்ரீ முகமது அஃபாண்டி அலியை பதவி நீக்கம் செய்தார்.

அதை எதிர்த்து வெ.2.23 மில்லியன் கேட்டு மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக அஃபாண்டி தொடர்ந்த வழக்கில் இன்று மலேசிய அரசு சமரசத் தீர்வை எட்டியது. இதன்வழி, மகாதீர் எடுத்த முடிவு தவறானது என்பது நிரூபணம் ஆனது.

இதற்கு முன், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சிறைக்குள் போலீசை வைத்து அடித்துச் சாய்த்த மகாதீர், வெளிநாட்டு செய்தியாளர்களிடம் அன்வார் சொந்தமாக குத்திக் கொண்டிருப்பார் என்று எகத்தாளமாக சொன்னார். ஆனால், நீதிமன்றம் அப்போதைய காவல்படை தேசியத் தலைவருக்கு தண்டமும் சிறையும் விதித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles