
நாட்டின் ஆயுதப் படையில் மலாய்க்காரர் அல்லாதவர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதற்கான காரணத்தை அறிய சிறப்பு பணிக்குழுவை அமைக்கும் பரிந்துரை நகைப்புக்குறிய ஒரு செயலென பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. ராமசாமி கூறியுள்ளார்.
அதற்கான காரணங்கள் ஒன்றும் பெரிய புதிரல்ல என கூறிய அவர், அந்நிலை ஏற்பட்டிருப்பதற்கான சில காரணங்களை அவர் முன் வைத்தார். ஆயுதப் படையில் வேலைக்கு எடுப்பதற்கான போதிய விளம்பரம் செய்யப்படாதது ஒரு காரணமாகும். அதேவேளை, மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் இராணுவத்தில் அதிகம் சேராமல் இருப்பதற்கு, பொதுச் சேவை துறையில் காணப்படும் இன அடிப்படையிலான கொள்கை முறையும் முக்கிய காரணமாக இருப்பதாக பி. ராமசாமி கூறினார்.



