28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

கட்டாய மரண தண்டனையை அகற்ற அரசு இணக்கம்

🔥 Views : 6
👁 Reading Now : 41

நாட்டில் கட்டாய மரண தண்டனையை அகற்ற அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக, சட்ட விவகார அமைச்சர் Wan Junaidi Tuanku Jaafar தெரிவித்தார்.

அந்த தண்டனைக்கு பதிலாக கடும் குற்றங்களுக்கு எத்தைகைய வேறு தண்டனைகளை வழங்குவது என்பதை நீதிமன்றங்களே முடிவு செய்யுமென அவர் கூறினார். கட்டாய மரண தண்டனைக்குப் பதிலாக, மாற்று தண்டனையை விதிப்பது மீதான ஆய்வறிக்கை, கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் மரண தண்டனையை அகற்றுவது குறித்து இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் கூறினார். இவ்வேளையில் அந்த ஆய்வறிக்கையை தயார் செய்த செயற்குழு முன் வைத்த பரிந்துரைகளையும் அரசாங்கம் பரிசீலிக்கும். அந்த பரிந்துரைகளின்படி, மரண தண்டனை விதிக்கப்படும் குற்றங்களுக்கு, எத்தகையை மாற்று தண்டனைகளை விதிப்பது குறித்த பரிந்துரைகள் ஆராயப்படுமென அமைச்சர் மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles