34.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

விலைவாசி உயர்வினால்
அரசு ஊழியர்களுக்கும் பெரும் பாதிப்பு

விலைவாசி உயர்வினால் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் அரசு ஊழியர்களும் செலவுகளை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வாழ்க்கைச் செலவினம் தொடர்ந்து அதிகரித்துள்ளதால் குறைந்த வருமானம் பெறும் அரசு ஊழியர்கள் மாதந்தோறும் 1,300 ரிங்கிட் சம்பளத்துடன் பெரும் சுமையை எதிர்நோக்கி வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரசு ஊழியர் ஒருவர் தெரிவித்திருப்பதாக உள்ளூர் இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறைந்தபட்ச சம்பளம் May 1-ஆம் தேதி முதல் 1,500 வெள்ளியாக உயர்த்தப்பட்டிருந்தாலும் Gred 19 அரசு ஊழியர்கள் அந்த சம்பள உயர்வை பெறமாட்டார்கள். இந்நிலையில், முன்பு வேலை செய்யும் இடத்தில் சாப்பாட்டிற்காக ஒரு மாதத்திற்கு 200 ரிங்கிட் செலவு செய்த நிலைமை இப்போது 400 வெள்ளியாக உயர்ந்துள்ளதையும் அந்தத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles