26.9 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

வெ.3 கோடிக்கு மின்விளக்கு கம்பக் குத்தகை:
-கோலாலம்பூர் மாநகர் மன்றத்துக்கு தொடர்பில்லையாம்

🔥 Views : 6
👁 Reading Now : 31

கிள்ளான் பள்ளத்தாக்கில் 200 மின்விளக்கு கம்பங்களை மாற்ற 3 கோடி வெள்ளீ மதிப்பிலான குத்தகை வெளியிடப்பட்டதற்கும், DBKL-கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அந்தத் திட்டத்தை தங்களது சொந்த நிதியிலே மேற்கொள்வதாக Ennova நிறுவனம் தெரிவித்தது.

மேலும், அத்திட்டத்தை செயல்படுத்தும் குத்தகை Sarawak Consolidated Industries நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியது. அத்துடன், அந்த மின்விளக்கு கம்பங்கள், 5G இணையச் சேவைக்கான தொலைத்தொடர்பு கடத்தியாகவும் செயல்படுமென Ennova நிறுவனம் குறிப்பிட்டது. இந்த விவகாரம் குறித்து வாரக் கணக்கில் பேசப்பட்டு வரும் நிலையில், கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் இந்தப் புதிய விளக்கம், புதிய பொருளைத் தருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles