
ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போரை துணிந்து முன்னெடுத்த தமிழ்ப் போராளி பூலித் தேவன் குறித்த வரலாற்று நாடகத்தை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை-கலாச்சார அறவாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
கிள்ளான் தமிழர் நாடகக் கலை மன்றம் ஏற்பாட்டில் உருவாகியுள்ள இந்த நாடகம், மலாயாப் பல்கலைக்கழகத்தின் ‘எக்ஸ்பெரிமெண்ட் அரங்கத்தில் ஜூன் 25, 26-சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களுக்கு இரவு 8:00 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு 44 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை முழக்கம் எழுப்பிய ஒரு தமிழ் மறவன் குறித்த இந்த நாடகம் இலவசமாக படைக்கப்படுகிறது. இந்த அரிய நாடகத்தை கண்டுகளிக்க அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
