26.4 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

உலகப் போட்டித் திறன் தரவரிசையில்
மலேசியா சரிவு

🔥 Views : 7
👁 Reading Now : 70

உலகப் போட்டித் திறன் தரவரிசையில் இந்த ஆண்டு மலேசியா ஏழு இடங்கள் சரிந்து 32 ஆவது இடத்திற்குச் சென்றுள்ளது என்று பன்னாட்டு மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம்-IMD அறிவித்துள்ளது.

கோவிட்-19க்கு பிந்தைய பொருளாதாரம் மெதுவாக மீட்சிபெறும் இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில், தாய்லாந்தும் 28வது இடத்திலிருந்து 33வது இடத்துக்கும் இந்தோனேசியா 37வது இடத்திலிருந்து 44வது இடத்துக்கும் சரிந்துள்ளன.

உலக அளவில் 63 நாடுகள் இந்த மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில், சீனாவும் ஓரிடம் சரிந்து 16 வது இடத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், ஆசிய-பசிஃபிக் பொருளாதார மண்டலத்தில் சீனா இன்னமும் முதல் இடத்தில் உள்ளது. இதில், சிங்கப்பூர் ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், ஹாங்காங் ஐந்தாம் இடத்தையும் தைவான் ஏழாம் இடத்தையும் வகிக்கின்றன.

ஆசியப் பொருளாதார மையங்களைப் பொறுத்தவரை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா, 43வது இடத்திலிருந்து 37வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles