26.4 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

எம்.ஏ.சி.சி. சுதந்திரமாக செயல்படுகிறதாம்!

🔥 Views : 6
👁 Reading Now : 33

ஊழல் தடுப்பு ஆணையம்-எம்.ஏ.சி.சி., ஆள்பார்த்து விசாரணை மேற்கொள்வதாகவும், நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் கண்காணிப்பின்கீழ் இந்த தேசிய அமைப்பு கொண்டுவரப் பட வேண்டும் என்றும் அண்மையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆணையம் சுதந்திரமாகவும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி செயல்படுவதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ Azam Baki தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு ஆணையத்தைக் கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கவும் ஐந்து அமைப்புகள் உள்ளன. இந்த நிலையில், எம்.ஏ.சி.சி. சுதந்திரமாக செயல்படவில்லை என்று கூறுவதில் உண்மையில்லை. எங்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட நிலையில் யாரை வேண்டுமானாலும் நாங்கள் விசாரணை மேற்கொள்ள முடியும் என ஊடக விருதளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட Azam Baki, செய்தியாளர்களிடம் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles