
தொலைத்தொடர்பு, மலேசிய சமூகத்தின் ஓர் அங்கமாகிவிட்ட இன்றைய கட்டத்தில், நல்ல லாபத்தில் இயங்கிவரும் டீஜி, செல்கோம் நிறுவனங்களை ஒன்றாக இணைப்பது, அபத்தமான யோசனை என்று மலேசிய பயனீட்டாளர் சங்க கூட்டமைப்பு-Fomca தெரிவித்துள்ளது.
இந்த இணைப்பால் சந்தையில் வாடிக்கையாளர்களுக்கான
தேர்வு வாய்ப்பு குறைவதுடன் கட்டணமும் அதிகரிக்கும் என்று Fomca துணைத் தலைவர் அஜித் ஜோல் கூறியுள்ளார்.
எனவே, மலேசிய தகவல் பல்லுடக ஆணையம்- MCMC, டீஜி-செல்கோம் இணைப்பை அங்கீகரிக்கக்கூடாது என்றும் அஜித் ஜோல் கேட்டுக் கொண்டுள்ளார்.
