28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

6 பணப் பட்டுவாடா கார்டுகளைப் பயன்படுத்தி ஸாஹிட் பொருள்களை வாங்கினார்

🔥 Views : 6
👁 Reading Now : 58
2013லிருந்து 2016ஆம் ஆண்டு வரை அம்னோ தலைவர் Ahmad Zahid Hamidi  வெளிநாடுகளில் தமது 6 கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கியதை ஒப்புக் கொண்டார்.
அப்போது துணைப் பிரதமராக இருந்த ஸாஹிட் ஒவ்வொரு மாதமும் வெளிநாடுகளுக்கு குறிப்பாக, பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, அரபு சிற்றரசு, தைவான், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளுக்குச் சென்று வந்ததை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
அக்கால் பூடி அறக்கட்டளையின் நிதியை அவர் சொந்த காரியங்களுக்குப் பயன்படுத்தி, கடனைச் செலுத்த பணப் பட்டுவாடா கார்டுகளைப் பயன்படுத்தியுள்ளார். மேலும் பல்வேறு குத்தகைத் திட்டங்களின் வாயிலாக அவர் 17 மில்லியன் ரிங்கிட்டை கையூட்டாகப் பெற்றதாக அவர் மீது 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு,  அந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி Collin Lawrence Sequerah முன்னிலையில் நடந்து வருகிறது. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles