26.9 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

மகளையும் பேரப்பிள்ளையும் கொன்ற மருமகனை மன்னித்தார் மாமனார்

🔥 Views : 6
👁 Reading Now : 66

ஜொகூர், பெர்மாஸ் ஜெயாவில் தமது மகளையும் பேரப்பிள்ளையையும் கழுத்தறுத்துக் கொலை செய்த மருமகனை தாம் மன்னித்து விட்டதாக மாமனார் Rosman Amad (ரோஸ்மான் அமாட்) தெரிவித்தார்.
தமது மருமகன் நல்ல மனிதர் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் கோபப்படாதவர். தமது மகளான Hajar Nurshahrin Rosman (ஹாஜார் நூர்ஷாஹ்ரின் ரோஸ்மானை) நல்ல முறையில் நடத்தியதாகவும் குறிப்பிட்ட ரோஸ்மான், அவர் தம்மிடம் மன்னிப்பு கேட்டதோடு, செய்த தவறுக்காக வருத்தப்படுவதாகக் கூறியதால், தாம் அவரை மன்னித்து விட்டதாகத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட நபர் தமது மனைவி ஹாஜார் நூர்ஷாஹ்ரினையும் 44 நாள்களே ஆன தமது குழந்தையையும் கழுத்தறுத்துக் கொலை செய்த பின்னர், மோட்டார் சைக்கிளில் நிர்வாண நிலையில் தப்பித்துச் சென்ற அவரைப் போலீசார் மடக்கி கைது செய்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles