28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பினாங்கு நீர்ப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்

🔥 Views : 5
👁 Reading Now : 54

பாலிங் வெள்ளப் பிரச்சினையினால் சுங்கை மூடா நீர் தேக்கத்திலிருந்து நீரை எடுக்க முடியாத பினாங்கு அரசு, மெங்குவாங் அணையிலிருந்து நீரைப் பெற முனைந்துள்ளது.
ஆயினும், அதிலிருந்து கிடைக்கும் நீர் பினாங்கு மாநில பயன்பாட்டுக்குப் போதுமானதாக இல்லை என்று மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி குறிப்பிட்டார்.
கெடாவில் இருந்து நீரைப் பெறுவதற்கு கெடா மந்திரி பெசார் அதிக கட்டணத்தைக் கோரும் வேளையில், பேராவிலிருந்து நீரைப் பெறுவதற்கு அம்மாநிலம் கெடுபிடியைக் காட்டி வருகிறது, இந்நிலையில் அதற்குப் பொறுப்பான அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான், எதையுமே செய்ய முடியாது செயலற்று இருக்கிறார்.
எனவே, இதற்கு ஒரு தீர்வைக் காண, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமசாமி கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles