28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

1எம்டிபி பணத்தைப் பெற்றவர்கள் அதற்கு உரிமை கொண்டாட முடியாது

🔥 Views : 6
👁 Reading Now : 26

1எம்டிபி பணத்தை நஜிப் ரசாக்கிடமிருந்து சட்டவிரோதமாகப் பெற்றவர்கள் அதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது என்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்தப் பணத்தைப் பெற்ற 31 பேர் தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களாவர். அந்தத் பணத்தை திரும்பச் செலுத்தத் தவறிய அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத்தத்தைச் செலுத்த மறுத்து எம்ஏசிசியின் மீது வழக்கை அவர்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த கூட்டரசு நீதிபதி ஹஸ்னா முகமட், அவர்களின் வழக்கைத் தள்ளுபடி செய்து அபராதத்தைச் செலுத்த வேண்டுமென தீர்ப்பளித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் காலத்தில், அப்போதைய எம்ஏசிசி ஆணையர் லத்தீபா கோயா, 1எம்டிபி பணம் 42 கோடி ரிங்கிட்டை 80 தனிநபர்களும் அமைப்புகளும் சட்ட விரோதமாகப் பெற்றிருப்பதாகவும் அதனைத் திரும்பப் பெற அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles