33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பிகேஆர் உள்கட்சி மோதலைத் தவிர்க்க வேண்டும்

🔥 Views : 9
👁 Reading Now : 52

கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரபிஸ் ரம்லியை விரும்பாதவர்கள் அவர் மீது அபாண்டமான பழியைப் போடுவோர் மீது அன்வார் இப்ராஹிம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராசிரியர் முகமட் தவ்ஃபிக் கேட்டுக் கொண்டார்.
ரபிஸியின் மீது தாக்குதல் தொடுப்போர் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது தொடர்ந்தால் பிகேஆர் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியை வலுப்படுத்துவதற்காக அதன் பேராளார் மாநாட்டை நடத்த வேண்டுமென ரபிஸி வலியுறுத்தி வருகிறார்.
அதே வேளையில், ரபிஸியை தாக்குவோர் மீது அன்வார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் இனிமேல் வாளாவிருக்கக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டார்.
கட்சிக்கு வித்திட்ட மக்களின் விருப்பதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அன்வார் இனி கட்சியை நடத்த முடியாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles