33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

ஸ்ரீலங்கா போரட்டவாதிகள் அதிபரின் மாளிகைய ஆக்கிரமித்தனர்

🔥 Views : 6
👁 Reading Now : 35

ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் சரிந்து உணவுப் பொருளும் அத்தியாவசிய பொருள்களும் கிடைக்காத மக்கள் வீதி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே Mahinda Rajapaksa மகிந்த ராஜபக்சே பதவி விலகிய பின்னரும், அதிபரான அவரின் சகோதரர் Gothapaya Rajapaksa கொத்தபாய ராஜபக்சே பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் ஆக்ரோஷமான இடைவிடாத போராட்டங்களை நேற்று நடத்தியதோடு, அதிபர் மாளிகையை முற்றுகை இட்டும் அதனை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றாலும்,, எதிற்கும் மசியாமல் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதனை முன்கூட்டியே அறிந்த கோத்தபாய யா ராஜபக்சே மாளிகையில் இருந்து வெளியேறி தலைமறைவாகி உள்ளார்.
அந்தக் கலவரத்தில் 2 போலீஸ்கார்ர்கள் உட்பட 22 பேர் காயமுற்றனர்.
பெட்ரோல் கிடைக்காததால் பெரும்பாலோர் பொது வாகனங்களைப் பயன்படுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கலவரத்தினால் அனைதுலக நாணய நிதியத்திலிருந்து கிடைக்க வேண்டிய 300 கோடி டாலர் (1,330 கோடி ரிங்கிட்) உதவி கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles