
நோய் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு உதவும் வகையில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் நிதியை திரட்டி வருகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று உலகில் வாழும் தமிழர்கள் தமிழக மக்கள் மருந்துகளை வாங்க உதவி புரிந்து வருகிறார்கள்.
அந்த வகையில் மலேசிய இந்தியர் சிகை அலங்கரிப்பாளர் சங்கம் இன்று தனது சார்பில் 10,000 வெள்ளி காசோலையை ம இ கா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி. மோகனிடம் ஒப்படைத்தது. சங்கத்தின் தலைவர் டாக்டர் மகேந்திரன் வெள்ளைச்சாமி, செயலாளர் ராஜசேகரன், சங்கத்தின் உறுப்பினர்களான கணேசன், கணபதி, ஜெயபாலன் ஆகியோர் இந்த நிதியை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர். தொப்புள்கொடி உறவுகளுக்கு நாங்கள் உதவி புரிந்துள்ளோம் என்று டாக்டர் மகேந்திரன் வெள்ளைச்சாமி தெரிவித்தார்.



