26.9 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

பிரதமராக ஆவதற்கு அன்வாருக்கு போதுமான ஆதரவு இருந்ததா?

🔥 Views : 7
👁 Reading Now : 66

2020ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரதமராக முனைந்த அன்வார் இப்ராஹிமிற்கு போதுமான ஆதரவு இருந்ததா என்பதை விளக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் பிகேஆர் பேராளர் மாநாட்டில் உரையாற்றிய அன்வார் இப்ராஹிம், 2020இல் தாம் ஊழல் அரசியல்வாதிகளின் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்ததால், பிரதமராகும் வாய்ப்பை இழந்ததாகக் கூறி இருந்தார்.
அதற்கு நஜிப், எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகவும் போதுமான சத்திய பிரமாணங்கள் இருந்ததாக கூறிக் கொண்டாலும், உண்மையில் அன்வாருக்கு அப்போது போதுமான ஆதரவு இல்லை என்றும், அவர் கூறுவது போல ஊழல்வாதிகளின் வழக்குகளை ரத்து செய்யும் பேச்சு எதுவும் நடந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஊழலை ஒழிக்கப் போவதாக சூளுரைத்துள்ள அன்வார், ஜசெகவின் தலைவர் லிம் குவான் எங், பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தில் வழக்குகளை எதிர்நோக்கும் வேளையில் இன்னமும் அவரை தற்காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles