30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

ஈரான், துருக்கி அதிபர்களுடன் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 45

ரஷியா நடத்தி வரும் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், போர் தொடுத்துள்ள ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன. இதற்கிடையே, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளைச் சமாளிக்க ஆசியா, வளைகுடா நாடுகளுடனான உறவை வலுப்படுத்த ரஷியா முயற்சித்து வருகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக ஈரான் சென்றுள்ளார். அங்கு அதிபர் புதின் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி, ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் துருக்கி அதிபர் தையூப் எர்டோகன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தற்போது ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles