
சபாவின் வருமானத்தைக் கொள்ளையடிக்கும் கூட்டரசு அரசாங்கம் அதன் மேம்பாட்டு வளர்ச்சியில் மாற்றாந் தாய் போல நடந்து கொள்வதாக வாரிசான் kalabathangan (கலாபாத்தாங்கான்) எம்பி (Ma’mun sulaiman) மாமுன் சுலைமான் சாடினார்.
சபாவை மலேசியா முக்கிய மாநிலமாகக் கருதுகின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சபாவில் இயற்கை வளம் அபரிமிதமாக இருந்தாலும் அது இன்னமும் வறிய நிலையில்தான் உள்ளது. அதன் பாதுக்காப்பு நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சூலு சுல்தானின் சபா மீதான உரிமை மற்றும் சுல்தானின் வாரிசுகள் அஸெர்பைஜானில் உள்ள பெட்ரோனாஸின் இரு துணை நிறுவனங்களைப் பற்றி விவாதிக்க சபாநாயகர் அஸார் ஹருண் அனுமதி மறுத்ததோடு அதனை வலியுறுத்திய கோத்தா பெலுட் வாரிசான் எம்பி இனாரைசா முனிரா மாஜிலிஸ் மக்களவையில் இருந்து இரு நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது அநீதி என்றும் அவர் விமர்சித்தார்.
