
இன்னும் இரு வாரங்களில் போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெயின் விலை 10 விழுக்காடு வரை குறையும் என்று பணவீக்கத்தை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட ஜிஹாட் குழுவின் தலைவர் Anuavar Musa (அனுவார் மூசா) தெரிவித்தார்.
சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களிடம் பேசிய பின்னர் விலை குறைப்பைச் செய்ய அவர்கள் இணங்கியதாக அவர் தெரிவித்தார்.
தற்போது போத்தலில் அடைக்கப்பட்ட 5 கிலோ சமையல் எண்ணெயின் விலை 42 ரிங்கிட்டாக விற்கப்படுவது மக்களுக்குப் பெரும் சுமையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
