28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

கேங் 08 ஜிஎஸ்டி எனும் குண்டர் கும்பலின் உறுப்பினர்கள் 28 பேர் கைது

🔥 Views : 5
👁 Reading Now : 68

கேங் 08 ஜிஎஸ்டி எனும் குண்டர் கும்பலைச் சேர்ந்த 28 பேர் கோலகுபு பாரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்கள் 2019 ஜனவரியில் இருந்து இவ்வாண்டு ஜூன் 23ஆம் தேதி வரை அந்தக் குண்டர் கும்பலில் இணைந்து உலு சிலாங்கூர், கலும்பாங், டின் மைன்ஸ் எனும் இடத்தில் செயப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அவர்கள் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 130 வி ஒன்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட வேளையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். .
அவர்கள் அனைவருக்கும் பிணை எதுவும் வழங்கப்படவில்லை. அதன் பின் சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கின் இரண்டாவது வாசிப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles