28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சபா பிரச்சனை தீரும் வரை Tommy Thomas (டோமி தோமஸ்) வெளிநாடு செல்லத் தடை விதிக்க வேண்டும்

🔥 Views : 7
👁 Reading Now : 34

சூலு சுல்தானின் வாரிசுகள் மலேசியாவின் மீது வழக்குத் தொடுத்து சபாவுக்கான இழப்பீட்டைத் தரும்படி கோரி இருப்பதால், அதற்கு காரணமான முன்னாள் சட்டத் துறைத் தலைவர் டோமி தோமஸ் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது, 2019ஆம் ஆண்டு சூலு சுல்தான் வாரிசுகளுக்கு அரசுக்கு எழுதிய கடிதத்தில், சபாவுக்கான ஆண்டுக் கட்டணத்தை 2013ஆம் ஆண்டிலிருந்து செலுத்தத் தவறியதற்காக தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், நிலுவையில் உள்ள 45,000 ரிங்கிட்டை விரைவில் செலுத்துவதாகவும் டோமி குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கடிதத்தை பயன்படுத்தி சூலு சுல்தான் வாரிசுகள் மலேசியாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனவே இந்தப் பிரச்சனை தீரும் வரை டோமி தோமஸ் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நஜிப் ரசாக் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles