28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

எம்பிகள் பாலியல் ரீதியாக நாடாளுமன்றத்தில் கேலி செய்கின்றனர்

🔥 Views : 7
👁 Reading Now : 28

பாலியல் ரீதியான துன்புறுத்தல் சட்டம் அமலுக்கு வரும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கூலாய் எம்பி Teo Nie Ching (தியோ நீ சிங்) கேள்வி எழுப்பினார்.
இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பாலிங் எம்பி Abdul Azeez Abdul Rahim (அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம்), Bung Moktar Radin பாசிர் சாலாக் எம்பி Tajuddin Abdul Rahman (தாஜுடின் அப்துல் ரகுமான்) ஆகியோர் அடிக்கடி பாலியல் ரீதியான கேலியும் கிண்டலும் செய்து இருப்பதால் அவர்கள் மீது இந்த சட்டம் பாயுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அவருக்குப் பதிலளித்த அப்துல் அஸிஸ், சில சமயங்களில் எதிர்க் கட்சி எம்பிக்கள் சபாநாயகரை கடுமையான வார்த்தைகளால் திட்டும்போது தாங்கள் வெகுண்டெழுந்து அம்மாதிரியான பாலியல் ரீதியான கருத்துக்களை வெளியிடுவதாக தெரிவித்தார்.
தியோ நீ சிங் மேலும் பேசும்போது ஓர் ஆசிரியர் பாலியல் வன்கொடுமை கேலி பேசியபோதும், ஒரு மாணவி தனது ஆசிரியர் பாலியல் ரீதியான கேள்வியை பேசியபோதும் இந்த அமைச்சு என்ன செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles