26.8 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

100 ஆண்டுகள் செயல்பட்டு வந்த கிளப்பை ரத்து செய்தது தவறு

சுங்கை பட்டாணியில் 100 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்த கிளப் ஒன்றை சங்கங்களின் பதிவதிகாரி ரத்து செய்தது தவறு என்று அலோர் ஸ்டார் உயர்நீதிமன்றத்திந் நீதிமன்ற ஆணையர் Arik Sanusi Yeop Johari (ஆரிக் சனுசி இயோப் ஜொஹாரி0 தீர்ப்பளித்தார்.
மேலும் சங்கங்களின் பதிப்பகம் 10,000 ரிங்கிட் செலவுத் தொகையாக அந்த கிளப்பிற்கு செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டார் .
அந்த கிளப் 1922ஆம் ஆண்டு துவக்கப்பட்டதாகவும் அதோடு ஒரு கோல்ஃப் திடலும் அமைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் அதன் உறுப்பினர்கள் சிலர் பொதுக்கூட்டம் நடத்தாமல் அந்த கிளப் நடந்து வருவதாகப் புகார் தெரிவித்ததை அடுத்து, அது 2020 ஜனவரி 22 ஆம் தேதி ஆர்ஓஎஸ் அதன் பதிவை ரத்து செய்தது.
2020 பிப்ரவரி 2ஆம் தேதி அந்த சங்கத்தின் கட்டடம் சீல் வைக்கப்பட்டது. மேலும் அரசு அந்த நிலத்தை கையகப்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த கிளப்பில் 2,000 உறுப்பினர்கள் இருப்பதாகவும் அதன் பதிவு ரத்து செய்யப்பட்ட பின், அதற்கு வருமானம் இல்லாமல் நட்டத்தில் இயங்கி வந்ததாவும் அதனைப் பராமரிக்க சங்கம் 16 லட்சம் ரிங்கிட்டை செலவிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles