28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

இரண்டு பேக்கெட் மைலோவை திருடியதாக மாது ஒருவர் மீது வழக்கு.

🔥 Views : 6
👁 Reading Now : 62

74 ரிங்கிட் பெறுமானமுள்ள மைலோ பேக்கெட்டுகல் இரண்டை திருடியதாக ஒரு மாது மீது மாரான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது..
43 வயதான அந்த மாது மே 25ஆம் தேதி மாரான் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அதனைத் திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது..
நான்கு பிள்ளைகளுக்குத் தாயான அந்த மாது 3000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு செப்டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது..
இதற்கு முன்னர், அந்த மாதுவுக்கு 14 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து, அந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டுமென அது உத்தரவிட்டது.
ஜூலை 5ஆம் தேதி அதே மாஜிஸ்ட்ரேட், அந்த மாதுவுக்கு 14 மாத சிறைத்தண்டனையை வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பல சமூகவாதிகள் அதனை கடுமையாக விமர்சித்தனர். அதனை அடுத்து இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் சுயமாக எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க கோல திரெங்கானு உயர்நீதிமன்ற நீதிபதி ஹசான் அப்துல் கனி உத்தரவிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles