28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

வழக்கறிஞர் நிறுவனத்தின் கணக்குகளைப் பரிசோதிக்க வருமான வரி வாரியத்திற்கு உரிமை இல்லை

🔥 Views : 7
👁 Reading Now : 25

வரியை விதிக்க வழக்கறிஞர் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்ய வருமான வரி வாரியம் விடுத்த கோரிக்கையை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது..
7 பேர் அடங்கிய கூட்டரசு நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை ஏற்றிய தலைமை நீதிபதி Tun Tengku Maimun Tuan Mat (தெங்கு மைமுன் துவான் மாட்) தமது தீர்ப்பில், வழக்கறிஞர் தொழிலைப் பாதுகாக்க அவர்களுக்கான சிறப்புச் சட்டம் இருக்கின்றது.
அதற்கு மாறக வருமான வரி வாரியம் செயல்படக் கூடாதென்றும், அது தனிப்பட்ட வழக்கறிஞர் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து வரி விதிக்கச் சட்டம் இடம் தரவில்லை என்றும் அவர் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் வருமான வரி வாரியம் சில வழக்கறிஞர் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை வேண்டுமென்றே பரிசோதித்து சட்டத்துக்குப் புறம்பானது என்று வழக்கறிஞர் மன்றம் புகார் தெரிவித்ததை அடுத்து, இந்த வழக்கு கூட்டரசு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles