
PM தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தும் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய மாணவர்களிடையே இந்த matriculation வாய்ப்பு நிராகரிக்கப்படுவது புதிதல்ல.
ஆகவே, அரசாங்கம் குறிப்பாக உயர்கல்வி அமைச்சு மாணவர் சேர்க்கைகான அடிப்படை கொள்கையை கடைப்பிடித்தால் அதற்கு ஏற்றவாறு இந்திய மாணவர்களையும் தயார்ப்படுத்த முடியும் என்று மலேசியா வேலன்படை தலைவர் சுரேந்திரன் பலராமன் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு SPM தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 200க்கும் அதிகமான மாணவர்களுக்கு வாய்ப்பு மருக்கப்பட்டிருப்பதாக சுரேந்திரன் தெரிவித்தார்.
மேலும் இந்திய மாணவர்களுக்கு ஏன் matriculation வாய்ப்புகள் மறுக்கப்பட்டிக்கிறது,எத்தனை பேருக்கு இடம் கிடைக்கிறது என்பதை அரசாங்கம் முறையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
matriculation வாய்ப்பு நிராகரிக்கப்படும் பட்சத்தில் பொது பல்கழைக்களகங்களுக்கு செல்லும் வாய்ப்பும் கணிசமாக குறையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியர்களுக்காக 10 விழுக்காடு ஒதுக்கிட்டை வழங்கும்படி கோரிக்கை விடுத்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
இந்த விவகாரத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு , பொது இயக்கங்கள் , அரசு சாரா இயக்கங்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து போராட வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன் வைத்தார்.
இதனிடையே வரும் Julai 22 தேதி வரை matriculation சேர்க்கைக்கான மேல் முறையிட்டை மாணவர்கள் மேற்க்கொள்ளலாம் .
*2022 ஆண்டு இந்திய மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அரசாங்கம் முறையாக மக்களுக்கு தெரிவிக்கவில்லை என்றால் , அரசு சாரா அமைப்பு Putrajaya முன்பு போராடுவோம் என்பதையும் மலேசியா வேலன்படை சார்பாக சுரேந்திரன் தெரிவித்து கொண்டுள்ளார்.
