28 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

சூலு சுல்தான் வாரிசுகளின் உரிமைக் கோரிக்கை: நாடாளுமன்றத்தில் பதில் சொல்லுங்கள்

🔥 Views : 11
👁 Reading Now : 25

சூலு சுல்தான் சபாவின் உரிமையைக் கோருவதால் அந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமே ஒழிய அதற்கு திரை மறைவில் விளக்கமளிப்பது நியாயமில்லை என்று கூலாய் எம்பி Teo Nee Ching (தியோ நீ சிங்) வலியுறுத்தியுள்ளார்.
அதற்கான விளக்கம் கோலாலம்பூர் ஸ்ரீபசிபிக் ஹோட்டலில் நடைபெறுவதால், அனைத்து எம்பிக்களும் அதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதில் சட்டத்துறை அமைச்சர் Wan Junaidi Wan Jabar (வான் ஜுனைடி வான் ஜாஃபார்), வெளியுறவு அமைச்சர் Saifudin Abdullah (சைஃபுடின் அப்துல்லா), பொருளாதார விவகார அமைச்சர் Mustapha Mohd (முஸ்தாப்பா முகமட்) ஆகியோர் விளக்கமளிப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக செலவிட்டு அதனை ஹோட்டலில் நடத்தாமல், மக்களவையில் நடத்தினால் பொதுமக்களுக்கும் அதன் முழு விவரம் தெரியவரும் என்று தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles