28 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

சிங்கப்பூர் அமைச்சருக்கு எதிரான வழக்கு மலேசியாவில் நடைபெறும்

🔥 Views : 5
👁 Reading Now : 59

சிங்கப்பூர் சிறையில் மரண தண்டனைக் கைதிகள் மிருகத் தனமாக நடத்தப்பட்டு, தூக்குத் தண்டணை விதிக்கப்படுவதாக சுதந்திரத்திற்கான வழக்கறிஞர் அமைப்பு ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தது.
அதனைக் கண்டித்து, அந்தச் செய்தியை மீட்டுக் கொள்ள வேண்டுமென சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் ஆர். சண்முகம் எச்சரிக்கை விடுத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகளின் அமர்வு, சிங்கப்பூரின் சட்டம் மலேசிய குடிமக்களைக் கட்டுப்படுத்தாது, பேச்சுரிமையைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
அது சம்பந்தமான வழக்கில் சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் ஆஜராக வேண்டுமெனவும் அது உத்தரவிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles