
மக்களவையில் உரையாற்றிய பாசிர் சாலாக் எம்பி Tajudin Abdul Rahman (தாஜுடின் அப்துல் ரஹ்மான்) எதிர்க்கட்சி பெண் எம்பிக்களைத் தரக் குறைவாகவும் கொச்சை வாத்தைகளாலும் பாலியல் ரீதியாகவும் நிந்துத்துப் பேசி தலைக் குனிவை ஏற்படுத்தியுள்ளார்.
அது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இழுகைத் தேடித் தந்துள்ளதால், அவர் மீது எம்மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அஸார் அஸிஸான் ஹருண் தெரிவித்தார்.
இந்நிலையில் வரம்பு மீறி தாஜுடின் யாரையும் மதிக்காமல் கண்டவாறு பேசுவதால் அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டுமென்றும், அவர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.



