28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

நஜிப்பின் வழக்கில் வாதாட குயீன்ஸ் கவுன்சிலருக்கு அனுமதி இல்லை
-உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 36

எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு செய்த குற்றத்திற்காக நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதற்கு எதிரான வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு, கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரிக்க ஆகஸ்டு 15லிருந்து 10 நாள்கள் ஒதுக்கப்பட்டது.
அந்த வழக்கில் நஜிப்பிற்கு ஆஜராக இங்கிலாந்து குயீன்ஸ் கவுன்சிலர் எனச் சொல்லப்படும் பிரபல வழக்கறிஞர் Jonahan Laidlow (ஜொனாதன் லெயிட்லோ) வை அனுமதிக்க வேண்டுமென முறையீட்டை செவிமடுத்திய உயர் நீதிமன்றம் அந்தக் கோரிக்கையைத் தள்ளுபடி செய்தது.
உள்ளூர் வழக்கறிஞர்களுக்கு மேலாக ஜோனாதனுக்கு சிறப்புத் தகுதி எதுவும் இல்லையென்றும், மலேசியாவில் சட்டங்கள், வரைமுறை, கலாச்சாரம் போன்றவற்றில் போதுமான ஞானம் அவருக்கு இல்லாமையால் அவர் நஜிப்பிற்காக வாதாட அனுமதி மறுப்பதாக நீதிபதி Ahmad Kamal (அமாட் கமால்) குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles