28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சொஸ்மா தடுப்புக் காலத்தை நீட்டிப்பது சிவில் உரிமையில் கை வைப்பதாகும்

🔥 Views : 6
👁 Reading Now : 27

சொஸ்மா சட்டத்தில் சந்தேக நபரை 28 நாள்களுக்கு மேல் தடுத்து வைப்பது மனித உரிமை மீறல் என கிள்ளான் எம்பி Charles Santiago (சார்ல்ஸ் சந்தியாகோ) சாடியுள்ளார்.
இந்தச் சட்டம் அரசியல்வாதிகளை பழிவாங்கும் நடவடிக்கையாகப் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் அவர் அச்சம் தெரிவித்தார்.
இந்தச் சட்டமானது கொடுங்கோண்மையானது, தடுத்து வைக்கப்படுபவர் தனித்து விடப்பட்டு, யாருடைய உதவியையும் நாட முடியாமல் தனிமைச் சிறையில் வாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார் என்றும் அரசின் எதிர்களை அடக்கவே இது முற்றிலும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நவீன காலத்திலும் இதுபோன்ற சர்வாதிகாரத் தன்மையான சட்டங்கள் தேவையா என்பதை அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டுமென சார்ல்ஸ் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் M. Kulasegaran (எம்.குலசேகரன்), Mohamed Hanipa Maidin (முகமட் ஹனிப்பா) ஆகியோரும் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles