26.4 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராஹிம் கவலைக்கிடம்

🔥 Views : 10
👁 Reading Now : 64

சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ Khalid Ibrahim (காலிட் இப்ராஹிம்) உடல்நலம் குன்றி உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நுரையீரல் தொற்று காரணமாக மே மாதம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவரின் உடல்நிலை சீரடைந்தது. சில மாதங்களுக்கு முன்னர் உடல் மெலிந்த நிலையில் அவரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
கடுமையான நீரிழிவு நோய்க்கும் சிறு நீரகக் கோளாறுக்கும் ஆளாகியிருக்கும் தாம், உடல் மெலிந்து விட்டதாக அவ்வேளையில் அவர் தெரிவித்திருந்தார்.
காலிட் இப்ராஹிம் பிகேஆர் கட்சியில் இருந்தபோது, 2008லிருந்து 2014ஆம் ஆண்டு வரை சிலாங்கூரின் மந்திரி பெசாராகப் பதவி வகித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles