28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

தூருன் மலேசியா ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது விசாரணை

🔥 Views : 6
👁 Reading Now : 22

போலீசாரின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி தூருன் மலேசியா ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை சோகோ பேரங்காடிக்கு முன்புறம் நேற்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி 3 மணிக்கு முடித்துக் கொண்டனர்.
டத்தாரன் மெர்டேக்காவுக்குச் செல்ல போலீசார் அனுமதிக்காததால் அவர்கள் கோலாலம்பூர் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையிலேயே ஆர்ப்பாட்டதை நடத்தினர்.
அக்கூட்டத்தில் 100க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கூடி தங்களின் அதிருப்தியைத் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் பதவி விலக வேண்டும், அவர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும், மக்களுக்கான உதவிநிதி தொடர வேண்டும், உதவி தேவைப்படுவோருக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும், பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டுமென்று அவர்கள் அறைகூவல் விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிகே ஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் Adam Adli Abd Halim (அடாம் அப்துல் ஹலிம்), காப்பார் எம்பி Abdullah Sani Abdul Hamid (அப்துல்லா சானி அப்துல் ஹமட்), ஆர்ப்பாட்டத் தலைவர் Amir Abdul Hadi (அமிர் அப்துல் ஹாடி) ஆகியோர் உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டம் போலீசாரின் அனுமதியின்றி நடத்தப்பட்டதால், அதில் கலந்து கொண்ட 30 பேர் அடையாளம் காணப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் Noor Delihan Yahaya (நூர் டெலிஹான் யஹாயா) தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles